தொலைக்காட்சிகளில் பிரம்மாண்டமாக ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதும் நடுவர்களுக்கு பல லட்சம் சம்பளம் கொடுத்து அழைத்து வருவதும் சாதாரண விசயமாக இருக்கிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கிய சில எபிசோடுகளிலேயே விரைவில் மூடுவிழா காண்பதும் அதைவிட சாதாரண விசயம்.
வட இந்தியாவை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடுவர்களை மாற்றிவிட்டு கம்மி சம்பளத்தில் நடுவர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளதாம்.
நடனநிகழ்ச்சி என்றால் நடிகைகள், டான்ஸ் மாஸ்டர்கள் நடுவர்களாக வருகின்றனர். அதேபோல பாடகர்களுக்கான ரியாலிட்டி ஷோ என்றால் மார்க் போட மார்க்கெட் போன பாடகர்களோ அல்லது மார்க்கெட்டில் இருக்கும் பின்னணி பாடகர்களோ வந்து சிலபல குறைகளை சொல்லி மனதை நோகடித்து அப்புறம் போனால் போகிறதென்று மதிப்பெண்களை போடுகின்றனர்.
காமெடி நிகழ்ச்சிகளுக்கு சினிமாவில் காமெடி என்ற பெயரில் கொலை செய்த நடிகர்கள், நடிகைகளை அழைத்து வந்து மார்க் போட வைக்கின்றனர். நட்சத்திர சேனல் எப்படியோ செலவில்லாமல் அவர்களின் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்கள், காமெடியன்களை வைத்தே ஒப்பேற்றி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காமெடியில் சொதப்புபவர்களை வெளியேற்ற இரண்டு குண்டர்களையும் அடியாட்களாக நியமித்துள்ளனர்.
ஆனால் வடஇந்தியாவை தலைமையாகக் கொண்ட தமிழ் சேனலில் தொடங்கப்பட்ட காமெடி நிகழ்ச்சி தற்போது வருத்தப்பட வைக்கிறதாம். பிரம்மாண்ட செட்... நான்கு நடுவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் என தயாரிப்பு செலவு ஏகத்திற்கும் எகிறிவிட்டதாம். என்னசெய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்த சேனல் தரப்பு முதலில் செட்டை வேறு இடத்திற்கு இடம் மாற்றிவிட்டதாம்.
அது மட்டுமல்லாது விரைவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடுவர்களை மாற்றிவிட்டு கம்மி சம்பளத்தில் நடுவர்களை அழைத்து வர முடிவு செய்துள்ளதாம் சேனல் தரப்பு.
வருத்தப்படாம இருக்கணும்னு ஆரம்பிச்ச நிகழ்ச்சி இப்படி வருத்தப்பட வச்சிருச்சே என்று புலம்புகின்றனராம் சேனல் நிர்வாகத்தினர்.
Post a Comment