மீண்டும் நீந்த நினைக்கும் வாளமீன்... சான்ஸ் கிடைக்குமா?

|

சென்னை: முதல் படத்திலேயே தனது பெயரில் பாடல் வரும் அளவிற்கு படு அமர்க்களமாக அறிமுகமானவர் இந்த ‘விகா' நடிகை. ஆனால், தொடர்ந்து நல்ல படங்கள் அமையாததால், தமிழில் நிலையான இடத்தைப் பிடிக்க இயலவில்லை.

ஆனபோதும், கிடைத்த வேடங்களில் நடித்து அவ்வப்போது நானும் உள்ளேன் ஐயா என தமிழ் சினிமாவில் ஆஜராகிக் கொண்டிருந்தார். பின்னர், சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில், மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்போது இவருக்குள் துளிர் விட்டுள்ளதாம். இதனால், சமீபத்தில் சென்னைக்கு ஒரு விசிட் அடித்த நடிகை, தனது பழைய நண்பர்களைச் சந்தித்து நட்பை புதுப்பித்துச் சென்றுள்ளார்.

அதிலும், குறிப்பாக தன்னை மீனாக ஆட விட்ட கண்ணாடி இயக்குநரையும், தனக்கு பிடித்த கலர் பிளாக் தான் என பாட வைத்த இயக்குநரையும் அவர் சந்தித்து சென்றுள்ளார்.

இதன் எதிரொலியாக கருப்பு கண்ணாடி இயக்குநரின் சலூன் கடை கத்தி படத்தில் நாயகி நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

Post a Comment