விஷாலின் பாண்டவர் அணிக்கு விவேக், மனோபாலா ஆதரவு!

|

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷாலின் பாண்டவர் அணிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் நடிகர் விவேக்.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கிறது. அந்தத் தேர்தலில் விஷால் தலமையிலான அணி, சரத்குமார் அணியை எதிர்த்துப் போட்டியிடுகிறது.

தனது தேர்தல் அணிக்கு பாண்டவர் அணி என்று பெயர் சூட்டியுள்ளார் விஷால். குருசேத்திரப் போராக நினைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் போராடுவதாக அறிவித்து வேலைப் பார்த்து வருகின்றனர்.

Vivek, Manobala supports Vishal team

சமீபத்தில் ரஜினி, கமல் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆதரவு கேட்டது விஷால் அணி.

அடுத்து விஜய் போன்ற நடிகர்களையும் சந்தித்தனர். நேற்று நடிகர் விவேக், இயக்குநர் - நடிகர் மனோபாலா ஆகியோரைச் சந்தித்தனர்.

இருவருமே விஷால் அணிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர்.

 

Post a Comment