'நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய நடிகன் கிடையாது!' - ரஞ்சித்தை மிரள வைத்த ரஜினி

|

ரஜினி சார் எளிமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரில் அவரது எளிமை கண்டு மிரண்டு போனேன், என்றார் இயக்குநர் பா ரஞ்சித்.

ரஜினி நடிக்கும் கபாலி படத்தை இயக்கும் பா ரஞ்சித் முதல் முறையாக விகடனுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் ரஜினியிடம் தான் கதை சொல்லப் போனபோது, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்துள்ளார். அதில் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்...

Rajini stunned director Ranjith

ரஜினியிடம் ரஞ்சித் கதை சொல்லி முடித்ததும், ரஜினி இப்படிச் சொன்னாராம்:

'இந்தப் படத்துல யார் யார் உங்க டீம்ல ஒர்க் பண்ணணும்னு, ஒரு கிரியேட்டரா நீங்கதான் முடிவு பண்ணணும். நான் தலையிட மாட்டேன். எனக்கு ஏதாவது ஐடியா தோணுச்சுன்னா சொல்றேன். அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உங்க விருப்பம்.

படத்துல நடிக்கப்போறவங்க பிரபலமா இருக்கணும்னு அவசியம் கிடையாது. யாரை வேணும்னாலும் நடிக்க வைங்க. நீங்க நினைக்கிற மாதிரி, நான் ஒண்ணும் அவ்ளோ பெரிய நடிகன் கிடையாது. ஏதோ மக்கள் ஆசீர்வாதத்துல நடிகனா இருக்கேன்'னு அவர் சொல்லச் சொல்ல, நான் மிரண்டுபோனேன்.

ரஜினி சார் எளிமையானவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு எளிமையானவரா என ஆச்சர்யமாக இருந்தது.

'கபாலி' எந்தப் படத்தின் ரீமேக்கும் கிடையாது. நான் படித்துச் சேகரித்த, சிந்தித்து உருவாக்கிய படம்.

ரஜினி சார் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நிச்சயமாகக் காப்பாற்றுவேன்!''

 

Post a Comment