இயக்குநர் லிங்குசாமிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன் என்று படத்தின் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி கூறினார்.
தமிழகம் முழுவதும் 'ஜிகினா' படம் இன்று வெளியாகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப் பட்டு வரும் இந்தப் படத்தின் இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி படம் குறித்துக் கூறுகையில், "இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் எடுக்கலாம் என உத்திரவாதம் அளித்ததோட , உடனடியாக படத்தை தொடங்கவும் செய்த என் நண்பரும் தயாரிப்பாளரும் ஆன திரைக்கடல் அவர்களுக்கு என் மனமார்ந்த்த நன்றி.
கதையை விவாதிக்க ஆரம்பித்த உடனே கதாநாயகனாக எங்கள் மனதில் தோன்றிய முதல் பெயர் விஜய் வசந்த்தான். படம் பார்த்தவர்கள் எல்லோரும் விஜய் வசந்த்தை மிகவும் பாராட்டுவார்கள். புதுமுகம் சானியா தாரா மிகவும் துடிப்பானவர். அவருக்கு மிக சிறந்த எதிர் காலம் இருக்கிறது.
(ஜிகினா படங்கள்)
இந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம் என நான் கருதுவது 'கும்கி' அஷ்வின், சிங்கம் புலி, மற்றும் ரவி மரியா ஆகியோரின் காமெடி.
என் தொழில் நுட்ப சகாக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா, இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ், படத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா ஆகியோர் இந்தப்படத்தின் முதுகு எலும்பு போன்றவர்கள்.
(ஜிகினா டிரைலர்)
'ஜிகினா' படத்தை வெளியிட முன்வந்த எனது நண்பரும் இயக்குநருமான லிங்குசாமிக்கும், அவரது சகோதரரும் என் நண்பருமான போஸுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு இயக்குனருக்கு வர்த்தக ரீதியான வெற்றி எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும் அவசியம். இந்த படத்தினை முதலில் பார்த்து கை தட்டிய லிங்குசாமி அவர்களே இந்த படத்தின் முதல் ரசிகர். அந்த வகையில் 'ஜிகினா' எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது நிச்சயம்," என்றார் நம்பிக்கையுடன்.
Post a Comment