நானும் ரவுடிதான் பர்ஸ்ட் லுக் - கழுத்தில் துண்டு நெற்றியில் திருநீறுடன் தரிசனம் தரும் விஜய் சேதுபதி

|

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருக்கும் ‘நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டார், நேற்று வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.


சிவப்புக் கலர் சட்டை, கழுத்தில் ஆரஞ்சு கலரில் துண்டு மற்றும் நெற்றியில் திருநீறு என முற்றிலும் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் காட்சியளிக்கிறார்.

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் பங்களிப்பில் 'நானும் ரவுடிதான்' படம் உருவாகியிருக்கிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ‘போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார், படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது.


இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் "அக்டோபர் 2ம் தேதி ‘நானும் ரவுடிதான்' படத்தை வெளியிடுவது என்று உறுதி செய்திருக்கிறோம். மேலும், படத்தின் டீஸர், பாடல்களை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.இதனை படத்தின் நாயகி நயன்தாராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

அக்டோபர் 2 ம் தேதி விஜயின் நடிப்பில் வெளியாகும் புலி திரைப்படத்துடன் விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் படத்தின் மூலம் மோதவிருக்கிறார்.

 

Post a Comment