வாலு படம் எப்படி இருக்கிறது என யாருக்குமே ஐடியா இல்லை. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால், அந்தப் படத்தை ஒரு வாட்டி பார்த்துட்டு வரலாமே என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்கள் உள்ளன. நேற்றுதான் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் என்பது உறுதியானது.
இந்த செய்தி காதுக்கு எட்டியதும் சிம்புவுக்கு முதல் வாழ்த்து சொன்னவர் யார் தெரியுமா? ரஜினிகாந்த்-தான்.
தன்னை ரஜினி ரசிகன் என்று அவ்வப்போது சிம்பு கூறினாலும், லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து யங் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டிக் கொண்ட சிம்புவை சந்தேக லிஸ்டில்தான் வைத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தங்கள் தலைவர் சிம்புவை வாழ்த்தியிருப்பதால் வாலுவை ஆதரிப்பதா, 'வாளாவிருப்பதா' என்ற குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
'எல்லோரையும் வாழ்த்துவது தலைவர் வழக்கம். யாரை ஆதரிப்பது என்பதை நாம தீர்மானிச்சா போதும்,' என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்!
Post a Comment