ஒரு இயக்குநரின் டைரி: இளையராஜா இசையில் படமாகும் சில்க் ஸ்மிதாவின் காதல் வாழ்க்கை!

|

கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற படங்களை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய வேலு பிரபாகரன் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

முந்தைய படங்களில் கடவுள் இல்லை என்பதையும், அரசியல் எப்படி ஏழை மக்களை வஞ்சிக்கிறது என்பதையும் சொன்ன இவர் அடுத்து எடுக்க இருக்கும் படத்தில் தன்னுடைய வாழ்க்கையையே படமாக்குகிறார்.

Ilaiyaraaja to compose Velu Prabhakaran's next

இந்த படத்திற்கு 'ஒரு இயக்குனரின் டைரி' என்று தலைப்பு வைத்திருக்கிறார். இந்த கதையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் நேசித்த நடிகைகளைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சில்க் ஸ்மிதாவிற்கும் தனக்கும் உள்ள காதல் வாழ்க்கையை காட்சிகளாக்கியிருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்தப்போகும் இந்த கதைக்கு இளையராஜா இசையமைக்கிறார். நேற்று இளையராஜாவை பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்த வேலு பிரபாகரன், படம் குறித்து அவருடன் ஆலோசனை செய்தார்.

 

Post a Comment