கடந்த ஓராண்டு காலமாகவே விஷால் செய்யும் நற்பணிகள் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகின்றன. இவர் என்ன நோக்கத்தில் இந்த உதவிகளையெல்லாம் செய்கிறார் என்று கேட்க வைத்துள்ளன.
இவற்றுக்கு விஷால் தரும் ஒரே பதில்: "நிச்சயம் அரசியல் இல்லை... ஏழைகளுக்கு உதவ வேண்டும், ஏழைக் குழந்தைகள் நன்கு படித்து நல்ல எதிர்காலத்தை அடைய வேண்டும் என்பதே!"
இன்று விஷாலுக்குப் பிறந்த நாள். இந்த நாளில் வழக்கமாக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல்கள் அல்லது பண்ணை இல்லத்தில் விருந்துண்டு கொண்டாடும் பழக்கத்தை இன்று முதல் விட்டொழித்து விட்டதாக அறிவித்துவிட்டார் விஷால்.
அடுத்து, இன்று காலை இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர்களுடன் தங்கி, உதவி அளித்து, உணவு பரிமாறினார்.
அடுத்து திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஷால் தங்க மோதிரங்களைப் பரிசாக அளித்தார். இந்தக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும் பரிசாக அளித்தார்.
அடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏழை, எளியவர்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். பாரிமுனையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தைக்கு தேவி என்று தன் தாயார் பெயரை விஷால் சூட்டினார்.
போகும் இடங்களிலெல்லாம் விஷாலை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
Post a Comment