யப்பா ஆர்யா... நீ மட்டும் என் படத்தோட ஆடியோ ரிலீசுக்கு வந்துடாதே என்று ட்விட்டரில் தன் நெருங்கிய நண்பன் ஆர்யாவைக் கேட்டுக் கொண்டுள்ளார் விஷால்.
காரணம் முன்பு ஆம்பள பட இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா போட்டு விட்டுப் போன ஒரு பெரும் பிட்டு.
'ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, "என்ன மச்சான் அதே தேதியில சில பெரிய படங்கள் வெளியாகுதே, எனக் கேட்ட போது எவனா இருந்தாலும் வெட்டுவேன்" என விஷால் கூறியதாக, ஆர்யா அந்த மேடையில் பேசி வைத்தார்.
காரணம் அதே நாளில்தான் அஜித்தின் 'என்னை அறிந்தால்', விக்ரமின் ‘ஐ' படங்கள் வெளிவர இருந்தன. இதனால் விஷால் வெட்டுவதாகச் சொன்னதாக ஆர்யா தெரிவித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த பாயும் புலி படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்து கொள்ளப் போவதாக ட்விட்டரில் ஆர்யா தெரிவிக்க, அதற்கு பதிலாக இப்படிக் கூறியுள்ளார் விஷால்:
"டியர் ஜாம்மி தயவு செய்து எனது இசை வெளியீட்டிற்கு வரவேண்டாம். சென்ற முறை நீ பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய். இந்த முறை வராதே. லவ் யூ, கடவுள் ஆசீர்வாதங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யா வருவாரா.. ஏதும் பரபரப்புக் கிளப்புவாரா எனக் காத்திருக்கிறது மீடியா. காரணம் இந்த முறை விஜய்யின் புலியும் விஷாலின் பாயும் புலியும் இசை வெளியீட்டிலும் சரி, பட வெளியீட்டிலும் சரி.. ஒரே நாளில் மோதிக் கொள்கின்றன.
Post a Comment