கமல் ஹாஸனின் தூங்கா வனம் படத்தை திருப்பதி பிரதர்ஸ் வாங்கவில்லை என்று இயக்குநர் லிங்குசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உத்தம வில்லன் படத்தில் நடித்தார் கமல் ஹாஸன். அந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட ரூ 30 கோடி பட்ஜெட்டில் ஒரு புதிய படம் நடித்துத் தருவதாக அவர் லிங்குசாமிக்கு எழுத்துப்பூர்வ உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் தூங்கா வனம் படத்தை தன் சொந்த பேனரில் ஆரம்பித்த கமல், அதனை மிகக் குறுகிய காலத்தில், 38 நாட்களில் முடித்து வெளியிடத் தயாராகி வருகிறார்.
லிங்குசாமிக்கு ரூ 30 கோடிக்கு செய்து தருவதாகக் கூறிய படத்துக்கு பதில், தூங்காவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை கமல் தந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்தத் தகவல்களை லிங்குசாமி மறுத்துள்ளார்.
'கமல் ஹாஸனின் தூங்கா வனம் படத்தின் சென்னை மற்றும் என்எஸ்ஸி ஏரியாக்களின் உரிமையை திருப்பதி பிரதர்ஸ் வாங்கியதாக வந்துள்ள செய்திகள் தவறானவை. எங்களது அடுத்த வெளியீடுகள் ஜிகினா, ரஜினி முருகன் மற்றும் இடம் பொருள் ஏவல் மட்டும்தான்,' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment