என்னதான் சூப்பர் ஸ்டார்களுடன் சூப்பர் ஹிட் படங்களுடன் நடித்திருந்தாலும் நாசருக்கு தன் தாய் வீடான நாடகங்களின் மீதுதான் தீராக் காதல்.
தான் இயக்கிய அவதாரம், தேவதை போன்ற படங்களில் கூட நாடகங்களே மைய இழையாக அமையும்படி பார்த்துக் கொண்டார் அவர்.
அடுத்து குழந்தைகளுக்காக கார்த்திக் ராஜா இசையமைத்து சினிமா பாணியில் தயாரிக்கும் ஒரு நாடகத்தில் நடிக்கிறார்.
அந்த நாடகத்துக்கு பட்டணத்தில் பூதம் என்று தலைப்பிட்டுள்ளனர். பாடலாசிரியர் பா விஜய் வசனம் எழுதுகிறார்.
இந்தப் படத்தில் பாடகர்களான ராகுல் நம்பியார், சின்மயி உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள். செப்டம்பர் 16 இல் இந்த நாடகம் சென்னையில் நடக்கவிருக்கிறது.
நான்கு நாட்கள் இந்த நாடகத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நாடகம் வெற்றி பெற்றால், இதையே முழுநீளத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களாம்.
Post a Comment