திருவனந்தபுரம்: நட்சத்திரத் தம்பதிகளான நஸ்ரியா - பஹத் பாசில் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நஸ்ரியா தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தார்.
பெங்களூர் டேஸ் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மலையாள நடிகர் பஹத் பாசிலை கடந்த 2014 ஆகஸ்ட் 21ம் தேதியில் நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் திருமணம் முடிந்து சரியாக இன்றுடன் 1 வருடங்கள் ஆகின்றது, தங்களது முதலாவது திருமண நாளை நஸ்ரியா - பஹத் இருவரும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
மேலும் நஸ்ரியா தங்களது திருமண நாள் கொண்டாட்டங்களை தனது அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பாக பதிவிட்டு இருக்கிறார்.
இவர்களின் முதல் திருமண தினத்திற்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
நஸ்ரியா நடித்தது குறைவான படங்களே என்றாலும் கூட மலையாள மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நஸ்ரியாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது, எனவே திருமணத்திற்குப் பின் நஸ்ரியா நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டனர்.
ரசிகர்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கப் போகிறது திருமணம் முடிந்த பின் சரியாக 1 வருடம் கழித்து மீண்டும் நஸ்ரியா நடிக்க வருகிறார், கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து மலையாளப் படமொன்றில் நஸ்ரியா நடிக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியே தமிழுக்கும் கொஞ்சம் வந்துட்டுப் போங்க நஸ்ரியா...
Post a Comment