திருமணத்துக்கு தயாராகும் அசின்... மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார்!

|

பிரபல நடிகை அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக புதிய படங்கள் எதிலும் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகிறார் அசின்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிஸியாக இருந்தபோதே இந்திப் பட உலகுக்குப் போனவர் அசின். முதல் இரு படங்கள் ஓரளவு ஓடினாலும், அடுத்தடுத்த படங்கள் தோல்வியைத் தழுவியதால், அசின் பெரிதாக எடுபடவில்லை பாலிவுட்டில்.

Asin to marry billionaire Rahul Sharma

இருந்தாலும் அவரால் தென்னிந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து மும்பையிலேயே வசிக்கிறார். இப்போது ஆல் ஈஸ் வெல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தேடி வந்த சில வாய்ப்புகளையும் மறுத்துவிட்டாராம்.

காரணம் மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் காதலித்து வருகிறார். இவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.

இதுகுறித்து அசினிடம் கேட்டபோது, "இப்போதைக்கு எனது எல்லா சினிமா ஒப்பந்தங்களையும் முடிப்பதில் கவனமாக இருக்கிறேன். புதுப் படங்கள், புதிய நிகழ்ச்சிகள் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் தர விரும்புகிறேன்," என்றார்.

விரைவில் திருமணத்தை முறைப்படி அறிவிக்கவிருக்கிறார் அசின்.

 

Post a Comment