சவாலே சமாளி... எம்எல்ஏ அருண்பாண்டியன் தயாரிக்கும் புதுப் படம்!

|

நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறி பின்னர் அரசியலுக்கும் வந்துவிட்ட அருண்பாண்டியன், மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

தனது ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் சார்பாக சவாலே சமாளி என்ற படத்தைத் தயாரிக்கிறார். அசோக் செல்வன், பிந்து மாதவி நடிக்கும் இந்தப் படத்தை சத்ய சிவா இயக்குகிறார்.

MLA Arunpandian's Savale Samali

முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்திதாஸ், வையாபுரி, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

உடல்நலமில்லாமல் இருந்து அரசின் உதவி பெற்று குணமடைந்துள்ள பரவை முனியம்மா இந்தப் படத்தில் நடிக்கிறார்.

எஸ்எஸ் தமன் இசையமைக்க, பி செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்....

பக்கா கமர்ஷியல் படம் சவாலே சமாளி. ஒவ்வொரு நடிகர், நடிகையுமே கேரக்டராகவே மாறி காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

இந்த படத்திற்காக பதிவு செய்த பாடலான "நல்லவனா கெட்டவனா ஆம்பள தெரியாமத் தான் தவிக்கிறாடா பொம்பள " என்ற பாடலைக் கேட்ட எஸ்.ஜே.சூர்யா இந்த பாடலின் படப்பிடிப்பு எப்போது, எங்கே நடந்தாலும் சொல்லுங்க நான் வந்து பார்க்கணும் என்றார்.

அதே மாதிரி அசோக்செல்வன் - ஜெகன் - ஐஸ்வர்யா நடித்த அந்த பாடல் மகாபலிபுரம் அருகே எடுக்கப் பட்ட போது எஸ்.ஜே.சூர்யா வந்திருந்து படப்பிடிப்பை பார்த்து பாடலையும், படமாக்கப்பட்ட விதத்தையும் பாராட்டிச் சென்றார்.

MLA Arunpandian's Savale Samali

நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா முதன் முதலாக இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடி இருக்கிறார். செப்டம்பர் மாதம் 4 ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது," என்றார் இயக்குநர் சத்யசிவா.

சவாலே சமாளி என்பது ஏற்கெனவே அறுபதுகளில் சிவாஜி, ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment