கபாலி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜுக்கு.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படமான ‘கபாலி'யின் தலைப்பு வெளியானதிலிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத் தளங்கள் இந்தத் தலைப்பை வைத்து பெரும் விவாதமே நடத்தி வருகின்றன.
இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகி விட்டது.
இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் அப்பா கஜராஜும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘பீட்சா', ‘ஜிகர்தண்டா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ், தன்னுடைய அப்பா கஜராஜை ஜிகர்தண்டா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர் ‘முண்டாசுப்பட்டி' படத்தில் நந்திதாவின் அப்பாவாக நடித்தார்.
தற்போது, ரஜினி நடிக்கும் ‘கபாலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார்.
‘கபாலி' படத்தில் ரஜினியுடன் நடிப்பது குறித்து கஜராஜ் கூறும்போது, "நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவருடைய நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.
கபாலி படம் முடிவாவதற்கு முன்பு கார்த்திக் சுப்பராஜிடமும் கதை கேட்டார் ரஜினி. ஆனால் அந்தக் கதையில் ரஜினி நடிக்கவில்லை. ஆனால் கார்த்திக் சுப்பராஜின் தந்தைக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
Post a Comment