சால்ட் அன்ட் பெப்பர்.. அதாவது பாதி நரைச்ச மீதி நரைக்காத தலை முடி பாணி.. இந்தப் பெயர் அஜீத்தின் மங்காத்தா படம் வெளியான பிறகு அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று படங்களில் அஜீத்தும் இந்த கெட்டப்பிலேயே நடித்துவிட்டார். இதனால், சால்ட் அன்ட் பெப்பர் லுக் என்றாலே அஜீத்தான் என பேசி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
இந்த நிலையில், ரஜினி அடுத்து நடிக்கும் கபாலி படத்தில் அவருக்கும் இந்த சால்ட் அன்ட் பெப்பர் லுக்தான் என்பது உறுதியாகிவிட்டது.
இதனால், தல வழியில் தலைவரும் இப்போது சால்ட் அன்ட் பெப்பரில் நடிக்கிறார் என அஜீத் ரசிகர்கள் சமூக இணைய தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர்.
உடனே ரஜினி ரசிகர்கள் அதற்கு பதில் அளித்துள்ளனர்.
"தல-க்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் நல்லாதான் இருக்கு. ஆனா அதுக்கு வழிகாட்டியே நம்ம தலைவர்தான். அவர் ஆரம்ப காலத்தில் நடிச்ச 6லிருந்து 60 வரை படத்திலேயே சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சில காட்சிகள் வருவார். அடுத்து தர்மதுரையில் அரை மணி நேரம் இந்த கெட்டப்தான். வள்ளி படத்தில் மேக்கப்பே இல்லாமல், உண்மையான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே தோன்றினார்... தல-க்கு வழிகாட்டி தலைவர்தான்," என்று கூறி தர்மதுரை, வள்ளி பட ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.
அஜீத் ரசிகர்களும் இதனை விவாதமாக்காமல், உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
Post a Comment