மம்பட்டியான் ஸ்டைலில் மதுரை மணிக்குறவன்... இளையராஜா இசையமைக்கிறார்!

|

ஹரிக்குமார் நடிக்கும் மதுரை மணிக்குறவன் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜி.காளையப்பன் தயாரிக்கும் படம் இது.

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஹரிகுமார் இந்த படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை எடுதுக் கொண்டிருக்கிறார். தோற்றத்திலும் உடல் வாகு, மற்றும் நடை, உடை பாவனையிலும் வித்தியாசத்தை காட்டி நடித்து வருகிறாராம்.

Ilaiyaraaja to score Madurai Manikkuravan

கதாநாயகியாக மாதவிலதா நடிக்கிறார். மற்றும் ரிஷிதா, பவித்ரா ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சரவணன், சுமன், கே.ஜி.காளையப்பன், சுஜாதா, அனுமோகன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், போண்டாமணி, முத்துக்காளை, ஐவரி.கே.சண்முகம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு ஆர்.கே.பிரதாப். எழுதி இயக்குபவர் ராஜரிஷி. படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் ராஜரிஷியிடம் கேட்டோம்...

"அந்தந்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு போராடி வட்டார மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, போன்று மதுரை மணிக்குறவனும் ஒருவன்.

மண் சார்ந்த மனிதனின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை சிறப்பாக இருக்கும் என்று அவரை அணுகினோம். அவரும் கதையைக் கேட்டு கதைக்கு உயிரூட்டுகிறேன் என்று அருமையாக டியூன் போட்டுக் கொண்டுத்திருக்கிறார். அது எங்கள் யூனிட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி," என்றார் இயக்குநர் ராஜரிஷி.

 

Post a Comment