சாந்தனு பாக்யராஜ் – கீர்த்தி திருமணம்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

|

சென்னை: நடிகர் சாந்தனு- கீர்த்தி திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Actor Shanthanu bhagyaraj – Keerthi marriage held today

திரைப்பட இயக்குனர்- நடிகர் பாக்கியராஜ்- பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு. இவர் சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடன இயக்குனர் ஜெயந்தியின் மகள்தான் கீர்த்தி. இவர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Actor Shanthanu bhagyaraj – Keerthi marriage held today

திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரின் சங்கித் விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.அதில் நடிகரும் சாந்தனுவுன் நண்பர்களுமான ஆர்யா,விஷ்ணு, விஷால்,ஷாம் மற்றும் நடிகை ஜனனி ஐயர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். டிவி தொகுப்பாளினி டிடியும் பங்கேற்றார்.

சாந்தனு- கீர்த்தி திருமணம் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் நடைபெற்றது இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் பங்கேற்றனர்.

நடிகர் விஜய், இவ்விழாவிற்கு காலையிலேயே வருகை தந்து, தாலி கட்டும் வரை கூடவே இருந்து மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு சென்றார். மேலும், சரத்குமார், ராதிகா சரத்குமார், பிரபு, ராதாரவி, மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, விஷால், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், இயக்குனர்கள் தரணி, ஹரி, காமெடி நடிகர் சூரி, கார்த்தி, ஜோதிகா, ரேவதி, சுகன்யா, நகுல், சங்கர் கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், விக்ராந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யர்களான இயக்குனர்கள் பார்த்திபன்-பாண்டியராஜன் இருவரும் வாசலில் நின்று வரவேற்றனர்.

திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment