சென்னை: நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் அமைக்காதது அந்த சங்கத்திற்கே அவமானம் தரக்கூடியது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணசேனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு நடிகர்கள் கமல், பிரபு உள்பட பல்வேறு திரையுலகில் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2002ஆம் ஆண்ட நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மணிமண்டபம் அமைக்கப்படவில்லை.
நியாயமாக இந்த மணிமண்டபத்தை நடிகர் சங்கம்தான் அமைத்திருக்க வேண்டும். அப்படித்தான் தமிழக அரசிடம் முதலில் நடிகர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால் செய்யவில்லை.
இதிலிருந்தே நடிகர் சங்கத்தின் நிர்வாகம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டாதது நடிகர் சங்கத்துக்கு அவமானம்தான்,'' என்றார்.
Post a Comment