சென்னை: மணிரத்னம் மாதிரி படம் இயக்க வேண்டும் என ஆசைப் படாதீர்கள், உங்கள் ஸ்டைலிலேயே படம் எடுங்கள் என நடிகையும், இயக்குநருமான சுஹாசினி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு அறிவுரைக் கூறியுள்ளார்.
கொல்லப்புடி சீனிவாஸ் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை சுஹாசினி, நடிகர் சித்தார்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்தி இயக்குநர் பாரா கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் க்யூ பட இயக்குநர் சஞ்சீவ் குப்தாவுக்கு சிறந்த புதுமுக இயக்குநர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சிரஞ்சீவி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் சுஹாசினி பேசியதாவது:-
கார்த்திக் சுப்புராஜீன் விசிறி நான். முதல் படத்திலேயே அவர் என்னைக் கவர்ந்து விட்டார்.
நீங்கள் உங்கள் ஸ்டைலிலேயே படம் பண்ணுங்கள். மணிரத்னம் மாதிரி யெல்லாம் செய்யணும்னு நினைக்காதீங்க. உங்களுக்குனு உள்ள ஸ்டைலிலேயே செய்யுங்க போதும்' எனத் தெரிவித்தார்.
சுஹாசினியின் அறிவுரையை கார்த்திக் சுப்புராஜூம் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டார்.
Post a Comment