சினிமா ஆசையில் கொல்கத்தாவிலிருந்து வந்த இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய டுபாக்கூர் இயக்குநரை ஹைதராபாத் போலீஸ் கைது செய்ததது.
சில மோசடிப் பேர்வழிகள் ஏதாவது ஒரு உப்புமா கம்பெனி பெயரில் ஹீரோயின்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து, வருகிற பெண்களிடம் பணம் கறப்பதும், அவர்களை அப்படியே மெல்ல மெல்ல விபச்சாரத்தில் தள்ளுவதும் சினிமாவில் தொன்று தொட்டு நடந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாதைச் சேர்ந்த ஹனுமான் நாயக் என்ற நபர் தன்னை இயக்குநர், தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொண்டு இளம் கதாநாயகி தேவை என அறிவிப்பு கொடுத்துள்ளார்.
அதை நம்பி கொல்கத்தாவிலிருந்து ஒரு இளம் மாடல் அழகி ஹைதராபாதுக்கு வந்து, இந்த ஹனுமான் சொன்னபடியெல்லாம் ஆடியிருக்கிறார்.
சும்மா ஒப்புக்கு சில நாட்கள் ஷூட்டிங் நடத்தி அந்தப் பெண்ணை நம்ப வைத்த ஹனுமான், பின்னர் அந்தப் பெண்ணின் கவர்ச்சிப் படங்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு, இஷ்டப்படி இந்தப் பெண்ணை அனுபவிக்கு இவ்வளவு ரேட் என பரப்பியுள்ளார்.
இந்த தகவல் போலீசுக்குத் தெரிய வந்ததும், விசாரணையில் இறங்கியுள்ளனர். அதன் பிறகுதான் இந்த டுபாக்கூர் ஹனுமான் நாயக்கின் லீலைகள் அம்பலத்துக்கு வந்தன.
இப்போது ஹனுமான் நாயக் பஞ்சாரா ஹில்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். அந்தப் பெண் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Post a Comment