சென்னை: பெரிய வீட்டு படத்தில் தனக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதால் புஸு புஸு நடிகை சுந்தரமான இயக்குனரின் பூ மனைவியுடன் பேசுவதை நிறுத்துவிட்டாராம்.
புஸு புஸு நடிகை சுந்தரமான இயக்குனரின் பெரிய வீடு படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட்டானதையடுத்து இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர். இரண்டாம் பாகத்தில் புஸு புஸு நடிகையுடன் சின்ன நம்பர் நடிகையும் உள்ளார்.
படத்தில் புஸு புஸுக்கு பேய் கதாபாத்திரமாம். அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகான கதாபாத்திரத்தை சின்ன நம்பர் நடிகைக்கு கொடுத்துவிட்டாராம் இயக்குனர். இதனால் புஸு புஸு நடிகை கோபத்தில் உள்ளாராம்.
இந்த கோபத்தில் இயக்குனரின் பூ நடிகை மனைவியுடன் பேசுவதை கூட புஸு புஸு நடிகை நிறுத்திவிட்டாராம். நான் என்னம்மா செய்வேன், என் கணவர் தான் படத்தை இயக்குகிறார் என்று இயக்குனரின் மனைவி கூறியும் அதை அவர் காதில் வாங்கவில்லையாம்.
கதாபாத்திரம் காரணமாக சின்ன நம்பர் நடிகையுடனும் புஸு புஸு நடிகை பேசுவது இல்லையாம்.
Post a Comment