ஹீரோயின் இல்லாமல் கூட நடிப்பேன்.. ஆனால் சந்தானம் இல்லாமல் ஷூட்டிங்குக்கே வர முடியாது என்கிற அளவுக்கு, தன் படங்களில் சந்தானம் இருந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் உதயநிதி.
ஆனால் சினிமா கூட்டணிகள் எந்தக் காலத்திலும் நிலையாக இருந்ததே இல்லை. மாறிக் கொண்டே இருக்கும்.
அந்த நிலை உதயநிதி - சந்தானம் கூட்டணிக்கும் வந்துவிட்டது. ஆனால் இது நட்பு முறிவால் வந்த மாற்றமில்லை. சந்தானம் ஏக பிஸியாக இருப்பதால் வந்த மாற்றம்.
இனிமே இப்படித்தான் படத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வசூலைப் பார்த்து, சந்தானத்தை 3 புதிய படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் படங்களில் சந்தானம் படுபிஸியாகிவிட்டார்.
இதனால் நெருங்கிய நண்பனான உதயநிதியின் புதிய படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. எனவே விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். உதயநிதியுடன் விவேக் இணைவது இதுவே முதல் முறை.
நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். ஓகே ஓகே வெற்றிக்குப் பிறகு இருவரும் இணையும் படம் இது. இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறவுள்ளது.
Post a Comment