மும்பை: நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா மீது காதலில் விழ பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தான் காரணமாம்.
கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் சென்றவர் அசின். அதோடு பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்தார். அக்ஷய் குமாரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மாவும் நெருங்கிய நண்பர்கள்.
இந்நிலையில் அக்ஷய் அசினை ராகுலுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்கள் இருவரும் காதலில் விழ அக்கி தான் காரணம் என்று கூறப்படுகிறது. அசின் ராகுல் ஷர்மாவை காதலிப்பதாக பல மாதங்களாக பாலிவுட்டில் பேச்சு அடிபட்டு வந்தது. ஆனால் அதை சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் தான் அசின் ராகுலை திருமணம் செய்ய உள்ளார். இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் அசின் புளியங்கொம்பாக பார்த்து பிடித்துவிட்டார் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.
திருமணத்திற்கு பிறகு அசின் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
Post a Comment