நடிகர் - இயக்குநர் பிரபு தேவா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 3 புதிய படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் ஒரு படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார்.
பிரபுதேவா சமீபத்தில் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் 3 திரைப்படங்களை தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தயாரிக்கும் படங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க பிரபுதேவா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபுதேவா தான் தயாரிக்கும் 3 புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை இவருடைய நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லட்சுமணன் இயக்கவிருக்கிறார்.
இன்னொரு படத்தை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தை ஏற்கெனவே அமலாபால் தயாரிப்பதால், அவருடன் பிரபுதேவா இணை தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.
மேலும், புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தையும் பிரபுதேவா தயாரிக்கவிருக்கிறார்.
Post a Comment