ரஜினிகாந்தைத் தொடர்ந்து கமல்ஹாஸனிடமும் ஆதரவு கோரினர் விஷால் அணியினர்.
நடிகர் சங்கத்துக்கு வரும் செப்டம்பர் 1-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இவ்விரு அணியிரும் தற்போது வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
சமீபத்தில் தென்மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு, நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரித்தனர். தற்போது, முக்கிய சினிமா பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் விஷால் அணியினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக இன்று நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினர் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர். அவரும் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கப் போவதாக விஷால் அணியினரிடம் கூறினார்.
பின்னர், விஷால் அணியினர் நடிகர் கமல்ஹாஸனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கோரினர். அவரும், நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, நடிகர்கள் நாசர், கருணாஸ், ஜேகே ரித்தீஷ், கார்த்தி, பொன்வண்ணன், நடிகை குஷ்பு ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment