சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தூங்காவனம் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அசத்தலான லுக்கில் கமல் காட்சியளிக்கிறார். விரைவிலேயே டிரைலர் வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு 'தூங்காவனம்' என தலைப்பிட்டப்பட்டுள்ளது. திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் திரில்லர் வகை கதையாகும். மற்றொரு சிகப்பு ரோஜாக்களாக இப்படம் அமையும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் போஸ்டர் இன்று மாலை வெளியாகியுள்ளது. டிரைலர் வெகு விரைவில் வெளியாகும் என்று படக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது வெளியாகியுள்ள படத்தில் கமல் சற்றே இளமை லுக்குடன் லேசான தாடியுடன் காணப்படுகிறார். அவரது லுக் மிகவும் மேன்லியாக உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
Post a Comment