வைத்தியத்துக்கு வந்த பேய்... இது ஜின் நாயகியின் அனுபவம்.. நிஜமா, ரீலா?

|

சமீப காலமாக பெருகி வரும் பேய் படங்களின் வரிசையில், அடுத்து வரவிருப்பது ஜின் படம்.

நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமான ஜின்னில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் புது முகம் டாக்டர் மாயா.

இன்னொரு புன்னகை அரசி எனும் அளவுக்கு மயக்கும் சிரிப்புக்கு சொந்தக்காரரான மாயா ஒரு பல் மருத்துவர். சினிமா மேல் உள்ள காதலால் 'ஜின்' மூலம் நாயகியாகிறார்.

Dr Maaya's experience with 'Ghost'

தான் நாயகியானது குறித்து டாக்டர் மாயா இப்படிச் சொல்கிறார்:

'எனக்கு இயக்குநர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பெரிய ஆசை. 'கஜினி' படத்தின் நாயகி கல்பனா போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூர்யா சாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் கனவு. எனக்கு பிடித்த கதாநாயகி ஜெனிலியாதான். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இயல்பாகவே டீன் ஏஜ் இளம் பெண்கள் போலவே இருக்கும். அந்த நடிப்பை அவர் தான் பிரமாதமாக பிரதிபலிக்கிறார்.என் கல்லூரி தோழிகள் பலர் அவரை போலவே நடித்தும் ,நடந்தும் கொள்வர்.

Dr Maaya's experience with 'Ghost'

'ஜின் படத்தை தொடர்ந்து என் அடுத்த படத்துக்காக நான் ஏகப்பட்ட கதைகள் கேட்டு வருகிறேன். பெயர் வாங்கும் அளவுக்கு பாத்திரம் இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். 'ஜின்' படத்தில் என்னுடைய அனுபவங்கள் ஏறத்தாழ படத்தின் மைய கதையான பேய் கதை போலதான். காளி வெங்கட், 'காதலில் சொதப்புவது எப்படி' அர்ஜுனன், முண்டாசு பட்டி முனீஸ் காந்த், மெட்ராஸ் ஜானி என்ற வளர்ந்து வரும் நகைசுவை கலைஞர்களுடன் 40 நாட்கள் படப்பிடிப்பு என்றால் எப்படி இருக்கும் . சிரித்து சிரித்து வயிற்று வலிதான். இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை கதாநாயகர்கள் ரமீஸ் ராஜாவும் , 'மெட்ராஸ்' கலையும் . தொடர்ந்து 40 நாட்களும் சில்லிடும் இரவுகளில் நடுக் காட்டில் பெரும்பாலும் படப்பிடிப்பு என்றாலும் , இவர்களின் கலாட்டாவால் படம் முடிந்ததே தெரியவில்லை.

ஒரு வித்தியாசமான அனுபவம் என்ன வென்றால், ஒரு நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்த போது ஒரு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் சற்றே தயங்கித்தான் அழைப்புக்கு செவி சாய்த்தேன். யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசினால், நடுங்கும் குரலில் ஒரு பெண். என்னவென்று விசாரித்தால் எனக்கு பல் வலி , வைத்தியம் பாப்பீங்களா என்று கேட்டது. என்ன பிரச்சனை என்றுக் கேட்டேன். நான் ரத்த காட்டேரி , எனக்கு பல் வலி . இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க இயலவில்லை என்று கேட்டு விட்டு கட கட என சிரிக்க ஆரம்பித்தது. நான் அவ்வளவுதான்.. கத்தி விட்டேன்.

Dr Maaya's experience with 'Ghost'

பயத்தால் காய்ச்சலே வந்து விட்டது. விளையாட்டுக்குத்தான் யாராவது செய்திருப்பார்கள் என்று பின்னர் புரிந்தது. ஆனால் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது. அதை செய்தது யார் என்று இன்னமும் தெரிய வில்லை," என்றார்.

ம்ம்.. ஒரு நடிகைக்கு எப்படியெல்லாம் விளம்பரம் தேவைப்படுகிறது பாருங்க!

 

Post a Comment