இனி நோ பர்த்டே பார்ட்டி... குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம்! - விஷாலின் புதுமுடிவு

|

இனி பிறந்த நாள் விழா விருந்துகளில் பங்கேற்கப் போவதில்லை. மலர்க்கொத்து போன்ற அன்பளிப்புகளை வாங்குவது கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கப் போகிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாயும் புலி விரைவில் வெளியாகிறது. அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Vishal's new resolution

இன்னொரு பக்கம் நடிகர் சங்க விவகாரத்தைக் கையிலெடுத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

படப்பிடிப்பு, நடிகர் சங்க வேலைகளில் தீவிரமாக இருந்தாலும், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்விக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.

நாளை பிறந்த நாள் கொண்டாடும் விஷால், இந்த ஆண்டு புதிய முடிவை எடுத்துள்ளார். இந்த பிறந்த நாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடுகிறார். அதேபோல, இனி பிறந்த நாள் விருந்துகளிலும் கலந்துக் கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.

பள்ளி குழந்தைகளின் கல்வி குறித்து இனி அதிக அக்கறை காட்டப் போகிறாராம்.

இனி மாலை, பொக்கே போன்றவற்றை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சாதனங்களை வாங்கித் தரப் போகிறாராம்.

 

Post a Comment