ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே.. ரீட்வீட் செய்து கன்பர்ம் செய்தார்!

|

சென்னை: ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது, படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யாரும் இல்லை என்று முன்பு செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது நடிகை ராதிகா ஆப்தே படத்தில் நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சை கிளப்பிய விவாதங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

Rajini's Next  Movie Radhika Apte Confirmed

இதனை ராதிகா ஆப்தே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். வடஇந்திய பத்திரிக்கை ஒன்று ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கிறார் என்று செய்தி வெளியிட, அதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் வழக்கமாக ஆடிப்பாடுகிற ஹீரோயினாக இல்லாமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ராதிகா ஆப்தே என்று கூறுகிறார்கள்.

ஹன்டர் மற்றும் படல்பூர் போன்ற ஹிந்திப் படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, தமிழில் நடிகர் அஜ்மலுடன் வெற்றிசெல்வன் மற்றும் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த அழகுராஜா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட பல சவாலான வேடங்களில் துணிந்து நடிப்பவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment