தனது அடுத்த படத்துக்கு குடியும் குடித்தனமும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.
மேலும் சினிமாவில் எல்லோரும்தான் குடிக்கிற காட்சிகளை வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - விஎஸ்ஓபி- படத்தில் அத்தனை காட்சிகளிலுமே குடிக்கிற காட்சிகளை வைத்திருந்தார் ராஜேஷ். ஒரு காட்சியில் கதாநாயகியே குடிப்பார்.
இதெல்லாம் கடுமையான விமர்சனங்களை படத்துக்கு எதிராகக் கிளப்பின. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குடியும் குடித்தனமும் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
இதில் எரிச்சலடைந்த இயக்குநர் ராஜேஷ், "நிச்சயம் இது அல்ல என் அடுத்த படத் தலைப்பு. அதேநேரம், என்னமோ நான்தான் குடிக்கும் காட்சிகளை வைப்பது போல சிலர் பேசுகிறார்கள். எல்லோரும்தான் அந்த மாதிரி காட்சிகளை வைக்கிறார்கள். கதைக்கு தேவை என்பதால் அப்படி வைக்க வேண்டியிருக்கிறது," என்று கூறியுள்ளார்.
அதற்காக சதா சர்வகாலமும் டாஸ்மாக் பாரிலேயே திரைக்கதை நொண்டியடித்தால் எப்படி ராஜேஷ்!
Post a Comment