சூரிக்கு முதல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. டிவிட்டரில் குவியும் "வாழ்த்து பரோட்டாக்கள்"

|

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இன்றைய சூழ்நிலையில் இளம் நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் சூரியின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது, பல்வேறு வெற்றிப் படங்களின் கூட்டணியிலும் சூரிக்கு ஒரு இடமிருக்கிறது.

Comedy Actor Soori Turns 38

எனவே காமெடி நடிகராக இருந்தாலும் சூரியின் பிறந்தநாளை சிறப்பாக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் சூரியின் ரசிகர்கள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் போன்ற படங்களில் சூரியுடன் சேர்ந்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

"எனது அண்ணன், நல்ல நண்பன் மற்றும் திறமையான நடிகர் சூரி அண்ணாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் மட்டுமின்றி இந்த வருடமே உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று சூரியுடன் தான் முறுக்கு மீசை வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்து சூரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தான் ஹீரோவாக நடித்த 7 படங்களில் கிட்டத்தட்ட 4 படங்களை சூரியுடன் இணைந்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன், இதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று போல் என்றும் வாழ்க.....

 

Post a Comment