'ரஜினியைச் சந்தித்தேன்... பேச்சே வரல.. லவ் யூ தலைவா!' - நடிகர் கலையரசன்

|

கடந்த இரண்டு தலைமுறை நடிகர்களுக்குள்ளும் ஒரு ரஜினி ரசிகன் உயிர்ப்போடு இருப்பான் என்பார்கள் கோடம்பாக்கத்தில்.

அதை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் கலையரசன். இரண்டு படங்கள்தான் நடித்திருப்பார். ஆனால் அதற்குள் ரஜினியுடன் கபாலியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டசாலிகளில் கலையும் ஒருவர்.

Actor Kalaiarasan flying; shocked by Rajinkanth

நேற்றைய கபாலி போட்டோ ஷூட்டில் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் கலையரசன்.

அந்த சந்திப்பு அனுபவத்தை சமூக வலைத்தளமான ட்விட்டரில் இப்படிக் கொண்டாடியுள்ளார் கலையரசன்.

Actor Kalaiarasan flying; shocked by Rajinkanth

"ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவரை (ரஜினி) இன்று சந்தித்தேன். இது எனக்கு மிகப் பெரிய நாள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக உணர்ந்தேன். ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.. லவ்யூ தலைவா.. இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை. பறந்து கொண்டிருக்கிறேன்..."

இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, நாசர் என முற்றிலும் புதிய குழு ரஜினியுடன் கை கோர்க்கிறது. வரும் செப்டம்பர் 17-ம் தேதி மலேசியாவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

 

Post a Comment