மருத்துவமனையிலிருந்து திரும்பினார் இளையராஜா... நேராக குற்றமே தண்டனை ரெகார்டிங்குக்கு சென்றார்!

|

மருத்துவமனையில் இரு தினங்கள் ஓய்வில் இருந்த இளையராஜா, இன்று அங்கிருந்து பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு திரும்பினார்.

மருத்துவமனையிலிருந்து வந்த கையோடு, குற்றமே தண்டனை படத்தின் இசைப் பதிவில் பங்கேற்றார்.

Ilaiyaraaja returns to work

இசையமைப்பாளர் இளையராஜா இரு தினங்களுக்கு முன் தனது இணையதளம் மற்றும் யுட்யூப் சேனலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார். இதற்கான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற பிறகு, உடல் சோர்வாக இருந்ததால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஓய்வுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா அறிவித்திருந்தார்.

அவருக்கு நெஞ்சு வலி என தகவல் பரவியது. ஆனால் உண்மையில், தொடர்ச்சியான மீடியா சந்திப்பு காரணமாக களைப்புற்ற அவருக்கு, லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில், இரு தினங்கள் ஓய்வெடுத்த பிறகு இளையராஜா இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.

ஆனால் அவர் நேராக வீட்டுக்குச் செல்லாமல், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்தார். அங்கு காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டனின் குற்றமே தண்டனை படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

Post a Comment