அருண்பாண்டியன் சார் பொத்தாம் பொதுவாக யாரையும் சொல்லாதீங்க- ட்விட்டரில் விஷால் பதிலடி

|

சென்னை: தமிழ் சினிமா மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளது. எடுத்த படத்தை வெளியிட முடியாத நிலை. இதனால்தான் ஒரு தயாரிப்பாளர் சிலை கடத்தல் வரை போயிருக்கிறார்.

என்று சினிமாவின் மோசமான நிலையை 2 தினங்களுக்கு முன்பு தான் சொந்தமாக தயாரிக்கும் சவாலே சமாளி, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் எடுத்துரைத்தார் நடிகரும் எம்எல்ஏ வுமான அருண்பாண்டியன்.

மேலும் அவர் பேசுகையில் ஒரு படம் தயாரிக்கும் போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத்தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பாளருக்கு யாரும் உதவி செய்வதில்லை.

Please Don't Generalize Arun Pandian Sir - Vishal Says in Twitter

படத்தின் சேட்டிலைட் உரிமைகள் கூட விற்பதில்லை,அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்" என்று கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பையும் சலசலப்பையும் ஒருசேர ஏற்படுத்திய இந்தப் பேச்சுக்கு தற்போது நடிகர் விஷால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "தயாரிப்பாளர்களுக்கு யாரும் உதவுவது இல்லை என்று பொதுவாக சொல்லாதீர்கள் அருண்பாண்டியன் சார், சில நடிகர்கள் (என்னையும் சேர்த்து) படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் செய்து செய்கிறோம்.

நீங்கள் கூறியது நல்ல கருத்துதான் ஆனால் யார் அப்படி செய்கிறார்களோ அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டே சொல்லுங்கள் என்று அருண்பாண்டியனுக்கு எதிராக தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் விஷால்.

விஷாலின் இந்தக் கருத்தை நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து விஷாலிற்கு ஆதரவளித்திருக்கிறார்.குஷ்பூவும் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அநியாயம் எங்கே நடந்தாலும் புரட்சித்தளபதி பொங்கிடுறாரு.....

 

Post a Comment