ஸ்ரீதேவி புலி கபூர் ட்விட்டரில் பேரை மாற்றிய நடிகை ஸ்ரீதேவி

|

சென்னை: நடிகை ஸ்ரீதேவி, விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் புலி. ஏற்கனவே படத்திற்கு ஏகப்பட்ட விளம்பரங்களை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியும் தனது பங்கிற்கு புலி திரைப்படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றார், எப்படித் தெரியுமா ட்விட்டர் அக்கவுண்டில் இதுநாள் வரை ஸ்ரீதேவி போனி கபூர் என்று பெயரை வைத்திருந்தவர் சமீபத்தில் தனது பெயரை ஸ்ரீதேவி புலி கபூர் என்று மாற்றி வைத்திருக்கிறார்.

Actress Sridevi Changed Her Twitter Name

மிக நீண்ட வருடங்கள் கழித்து ஸ்ரீதேவி தமிழில் நடிக்க வந்ததால் அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து அவரின் கண்டிஷன்கள் அனைத்திற்கும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர் புலி படக்குழுவினர்.

இதனால் மகிழ்ந்து போன ஸ்ரீதேவி தன்னால் இயன்ற அளவிற்கு புலியின் புகழை பாரெங்கும் பரப்பி வருகிறார், என்னமா இப்படி பண்றீங்களேம்மா...

 

Post a Comment