எனது குழந்தையின் பாதம் பூமியை தொட உதவிய... சினேகாவின் சிலிர்ப்பான ட்வீட்

|

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய நடிகை சினேகா உடன் நடித்த சக நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்து கொண்டார். மகிழ்ச்சியான இவர்களின் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக நடிகை சினேகா வெகு விரைவிலேயே தாய்மை அடைந்தார்.

நடிகை சினேகா- பிரசன்னா நட்சத்திர தம்பதியினருக்கு கடந்த வாரம் அழகான ஆண் குழந்தை பிறந்தது, திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11 ம் தேதி சிநேகாவிற்கு குழந்தை பிறந்தது.

Thanks Everyone - Sneha Says in Twitter

திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் சினேகா தம்பதியினருக்கு வாழ்த்து மழை குவிந்தது, இந்நிலையில் தன்னை வாழ்த்திய மற்றும் தான் குழந்தையை பெற்றெடுக்க உதவிய அனைவருக்கும் ட்விட்டர் மூலம் சினேகா தனது நன்றியைத் தெரிவித்து இருக்கிறார்.

சினேகாவின் தனது ட்வீட்டில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார் " தாயானபின் எனது முதல் ட்வீட் இது, எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் மற்றும் வேண்டுதல்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். கைகளில் எனது குழந்தை இருக்கும் இந்தத் தருணம் முழுமையான ஒரு பெண்ணாக நான் உணர்கிறேன், நன்றி கடவுளே" என்று தான் அம்மாவாக மாறிய அந்தத் தருணத்தை சிலிர்ப்புடன் நினைவு கூர்ந்திருக்கிறார் சினேகா.

மேலும் மற்றொரு ட்வீட்டில் தனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சுதாசிவகுமர் உள்பட மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சினேகா கூறியுள்ளார்.

சினேகா இப்போ ஹேப்பி அண்ணாச்சி.........

 

Post a Comment