பீட்சா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைகிறார் ரம்யா நம்பீசன். இந்தப் படத்துக்கு சேதுபதி என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி -ரம்யா நம்பீசன் நடித்து பெரும் வெற்றிப் பெற்றது பீட்சா. இதில் ரம்யா நம்பீசன் வேடம் மற்றும் அழகு ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.
‘பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படத்தை இயக்கிய அருண் குமார், அடுத்து இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். வான்சன் மூவிஸ் ஷான் சுதர்சன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘சேதுபதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மதுரையில் நடக்கும் இந்தக் கதையில், விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். நேர்மையான போலீசாக நிலைத்திருக்க அவர்களின் அன்றாட பிரச்சனைகளையும், அவர்கள் சந்திக்கும் சவால்களையும் உணர்த்தும் படமாக இது வெளிவர இருக்கிறது.
ரம்யா நம்பீசன் இந்தப் படத்தின் அவரது கதாபாத்திரத்துக்காக எடையைக் குறைத்துள்ளார். இதில், அவரது கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு இணையாக வலுவானதாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
‘தெகிடி' படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். செப்டம்பரில் இந்தப் படம் தொடங்குகிறது.
Post a Comment