சமையல் தாமுவின் "உள்குத்து"!

|

சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சிகள் நடத்தும் தாமு சினிமாவில் நடிக்க வந்து விட்டார். உள் குத்து படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகிறாராம் தாமு.

சின்னத்திரையில் இருந்து சந்தானம், சிவகார்த்திக்கேயன்,

திவ்யதர்ஷினி, தீபக் என தொகுப்பாளர்கள் மட்டுமே நடிக்க வந்தனர். பட்டிமன்றம் மூலம் பிரபலமான பேராசிரியர்கள் சாலமன் பாப்பையா, ராஜா ஆகியோரும் சங்கர் படம் மூலம் நடிக்க வந்தனர். இப்போது சமையல் கல்லூரி பேராசிரியர் தாமுவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

Chef Dhamu to make his Kollywood debut?

சினிமாவில் நடிக்க வந்த பறவை முனியம்மா சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சி செய்தார். ஜெயா டிவியில் சமையல் நிகழ்ச்சி செய்த செஃப் தாமு, விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியின் நடுவராகவும் வந்து சாப்பிட்டு மார்க் போடுகிறார் இப்போது உள்குத்து திரைப்படத்தில் காமெடி நடிகராக களம் இறங்கிவிட்டார் தாமு.

இவர் ஏற்கனவே தண்ணியில கண்டம் படத்தில் நடித்திருந்தாலும் உள்குத்து படத்தில்தான் படம் முழுக்க வருகிறாராம். உள்குத்து படத்தில் அட்டகத்தி தினேஷ், நந்திதா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றன. மீனவர்கள் வாழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை கார்த்திக் ராஜூ இயக்குகிறார்.

சமையல்தாமுவின் உள்குத்து எப்படி இருக்கும்? பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

 

Post a Comment