வாலு பட விவகாரத்தில் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தியதற்காக டி ராஜேந்தருக்கு நன்றி என உதயநிதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வாலு படம் ஆகஸ்ட் 14 அன்று வெளிவருவது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டி. ராஜேந்தர். அப்போது அவரிடம் வாலு - உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "நான் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன். அதிகப் படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்குத்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படும். அதனால் தான் அந்தப் படத்துக்கு (வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க) அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன. அவர்களைக் குறை சொல்ல மாட்டேன். ரிலீஸ் தேதியே தெரியாத எங்க படத்துக்கு எப்படி அதிக தியேட்டர் ஒதுக்குவாங்க... இருந்தாலும் எங்களுக்காக சிலர் காத்திருந்து தியேட்டர் தந்திருக்காங்க. அவர்களுக்கு நன்றி," என்றார்.
இதற்கு நன்றி தெரிவித்து உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர், "நான் எப்போதும் டி.ஆர் சாரை மதிப்பேன். பிரச்னையைத் தெளிவுபடுத்தியதற்காக நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment