சென்னை: ஆர்யா அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் இஞ்சி இடுப்பழகி திரைப்படம் உருவாகி வருகின்றது. 2 மொழிகளிலும் உருவாகி வரும் இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்து இருக்கின்றனர், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழில் இஞ்சி இடுப்பழகி என்றும் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்றும் பெயர் வைத்திருக்கின்றனர், அடுத்த மாதம்(செப்டம்பர் ) 7ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் படத்தின் இசையை இஞ்சி இடுப்பழகி குழுவினர் வெளியிட இருப்பதாக கூறுகிறார்கள்.
இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கி வரும் இந்தப் படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்து வருகிறார், பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் இஞ்சி இடுப்பழகிக்கு பிரபல ஒளிப்பதிவாளார் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் கதைப்படி குண்டுப் பெண்ணாக விளங்கும் அனுஷ்காவின் எடையைக் குறைக்கும் உடற்பயிற்சியாளராக ஆர்யா நடித்திருக்கிறார், அக்டோபர் 2 ம் தேதி இஞ்சி இடுப்பழகி திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Post a Comment