ராதிகா 'ஆத்தே'... புள்ளபூச்சியெல்லாம் கருத்து சொல்லுதே!

|

சினிமா நடிகர்களில் இரண்டு வகை. ஒரு பிரிவினர் பெரிதாக பேச மாட்டார்கள். அவர்கள் படங்களில் கமர்ஷியலாக சொல்லியடிக்கும். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு பிரிவினர் ஓயாமல் பேசிக் கொண்டும், கருத்து சொல்லிக் கொண்டும் புரட்சி பேசிக் கொண்டும் திரிவார்கள். யாருக்கும் நயா பைசா பிரயோசனப்படமாட்டார்கள். ஒரு ஹிட் படம் கூடக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

Big mouth Radhika Apte irritates

ராதிகா ஆப்தே இந்த இரண்டாவது பிரிவில் வெகு விரைவில் சேரக் கூடிய வாயப்பு பிரகாசமாகத் தெரிகிறது.

தமிழில் இவர் நடித்தது மூன்றே மூன்று படங்கள். தோனி, அழகுராஜா, வெற்றிச்செல்வன்....மூன்றும் பெட்டிக்குள் சுருண்டு கொண்டன. அதன் பிறகு தெலுகு சினிமாக்காரர்கள் பற்றி இவர் ஏடாகூடமாக ஏதோ பேசி வைக்க, ஹைதராபாத் பக்கம் வந்தா தொலைச்சிப்புடுவோம் என தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் விடுதத மிரட்டலால் மும்பைக்குப் போனார். ஏடா கூடமான காட்சிகளில் நடித்தார். ட்ராமா ஒன்றிலும் கூட நடித்தார். எதுவும் பைசா பேராத சமாச்சாரங்கள்.

இந்த நிலையில் இவர் நடித்த குறும்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு ரஜினி படத்தின் நாயகியாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

கபாலி நாயகியானதிலிருந்து நாளுக்கு நாள் கருத்து சொல்லவும் ஆரம்பித்துள்ளார்.

Big mouth Radhika Apte irritates

இப்போது அவர் கூறியுள்ள கருத்து:

"நான் 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்கள், சிறு பட்ஜெட் படங்களில் எல்லாம் நடித்துவிட்டேன். நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. நடிகர்- நடிகைகளுக்கு வியாபார மதிப்பீடு முக்கியம். இவர்கள் நடித்தால் படங்கள் நன்றாக ஓடும்என்று பெயர் எடுக்கவேண்டும். அதற்கேற்ப கதை, மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும். பல கோடி பணத்தை முதலீடு செய்து படங்களை எடுக்கிறார்கள். வியாபார ரீதியாக அவர்கள் லாபம் அடையவேண்டும்!"

-ஒருவேளை தனக்குத் தானே சொல்லிக் கொண்டாரோ!

 

Post a Comment