துரை செந்தில்குமாரின் புதிய படத்தில் இரட்டை வேடம் ஏற்கும் தனுஷ்?

|

சென்னை: எதிர்நீச்சல் இயக்குநர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார் தனுஷ் என்று புதிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மாரி படத்திற்குப் பண்பு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த வேலையில்லாப் பட்டதாரி படத்தின் படப்பிடிப்பு, தற்போது நிறைவடைந்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Dhanush to Team Up with ‘Edhir Neechal’ Director Next

துரை செந்தில்குமாரின் புதிய படத்தில் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன, துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்து மாரி வரை சுமார் 33 படங்களில் நடித்து இருக்கிறார் தனுஷ்.

30க்கும் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை 2 வேடங்களில் நடித்தது இல்லை தனுஷ், முதல்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்பதால் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

மேலும் தனுஷ் 2 வேடங்களில் நடிக்கும் இந்தப்படம் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

ஏற்கனவே துரை செந்தில்குமார் இயக்கிய எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களைத் தயாரித்திருந்த தனுஷ், 3 வது முறையாக துரை செந்தில்குமாரின் படத்தைத் தானே நடித்து தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment