நடிகர் சயிப் அலி கானா, ஏன் இப்படி செய்தார்?: வியக்கும் பாலிவுட்

|

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தனது 45வது பிறந்தநாளை வீட்டில் தனது மனைவி கரீனா கபூரோடு மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தனது 45வது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். வழக்கமாக சயிப் தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடுவார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை பாலிவுட்காரர்களே வியக்கும் வகையில் சப்தம் இல்லாமல் வீட்டில் தனது மனைவியும், நடிகையுமான கரீனா கபூருடன் மிகவும் எளிமையாக கொண்டாடியுள்ளார்.

Saif Ali Khan celebrates birthday in hush hush manner

பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா ஆனால் வீட்டிலேயே பார்ட்டி கொடுத்துள்ளார். அதுவும் மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான். சயிப் அளித்த பார்ட்டியில் கரீனாவின் அக்காவும், நடிகையுமான கரிஷ்மா கபூர் கலந்து கொண்டார்.

மேலும் கரீனாவின் தோழிகளான மலாய்க்கா அரோரா, அம்ரிதா அரோரா ஆகியோரும் பார்ட்டியில் கலந்து கொண்டனர். கரீனாவும் அம்ரிதா அரோரோவும் மிக மிக நெருங்கிய தோழிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா தான் நடித்துள்ள பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டான சந்தோஷத்தில் உள்ளார்.

 

Post a Comment