பாயும்புலிக்கு தடையா?: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்!

|

லிங்கா நஷ்ட ஈட்டுப் பிரச்சினைக்காக வேந்தர் மூவீஸின் பாயும் புலி படத்துக்கு தடை விதிப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

‘ராக்லைன் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘லிங்கா' திரைப்படம் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டு தொகைக்காக ‘வேந்தர் மூவிஸ்' நிறுவனத்தின் தயாரிப்பான ‘பாயும் புலி' தமிழ் திரைப்படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட தடைவிதித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.

Producers Council condemns Theaters owners Assn

இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் ஆகும். மேலும், இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல். ‘லிங்கா'வில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ‘பாயும் புலி' திரைப்படத்துக்கு தடை விதிப்பது எந்தவிதத்திலும் தொழில் தர்மம் அல்ல.

எனவே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உடனடியாக ‘பாயும் புலி' திரைப்படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். அப்படி தடையை நீக்காதபட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்து தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment