த்ரிஷாவின் நாயகி முதல் பார்வை போஸ்டர் வெளியானது

|

சென்னை: நடிகை த்ரிஷா சினிமாவில் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகின்றன, இந்த 13 ஆண்டுகளில் சுமார் 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

சுந்தர்.சியின் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் அரண்மனை 2 திரைப்படம் த்ரிஷாவின் 50 வது படமாக அமைந்து இருக்கிறது, இதுவரை நடிகர்களின் காதலியாக நடித்து வந்த த்ரிஷா தற்போது முதன் முதலாக தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

Trisha's 'Nayaki' First Look Poster Revealed

நாயகி என்ற படத்தில் த்ரிஷா தற்போது நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார், இந்தப் படத்தில் த்ரிஷா 2 வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

2 வேடங்களில் ஒரு வேடத்தில் நடிகையாக நடிக்கிறார் மற்றொரு வேடம் பற்றி தெரியவில்லை, அதனை ரகசியமாக படப்பிடிப்புக் குழுவினர் வைத்திருக்கின்றனர்.

த்ரிஷாவின் ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்க, இவர்களுடன் இணைந்து மனோபாலா, கோவை சரளா போன்றோர் நடிக்கவிருக்கின்றனர். காமெடி+ திகில் கலந்து உருவாகும் நாயகி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

Trisha's 'Nayaki' First Look Poster Revealed

ஆகஸ்ட் 20 ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தப் படத்தில் நடிப்பது பெருமையான விஷயம் என்றும் இது தனது வாழ்வின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் நாயகி திரைப்படம் உருவாகின்றது, அறிமுக இயக்குநர் கோவி இயக்கும் இந்தப் படத்திற்கு ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய ரகு குஞ்சே இசையமைக்கிறார்.

நாயகிக்கு(த்ரிஷா) ஏற்ற படம்தான்....

 

Post a Comment