காதல் குழம்பு வைக்க தெரியுமா? இதோ ரெஸிபி

|

காரக் குழம்பு தெரியும், கறிக்குழம்பு தெரியும் இதென்ன காதல் குழம்பு என்று கேட்கிறீர்களா? இப்படி ஒரு குழம்பு இருக்கிறது என்று ஜீ தமிழ்

தொலைக்காட்சியின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் கூறியுள்ளார் ஒரு பெண்.

குமட்டல் சமையல் நிகழ்ச்சியில் அபிநயா சொன்ன காதல் குழம்புதான் சமூக வலைத்தளங்களில் ஹிட். எப்படி செய்யணும்னு தெரிஞ்சுக்கங்க. உங்களுக்கு யூஸ் ஆகும்.

Kadal Kulambu recipe

தேவையான பொருட்கள்

வீணா போன பிகரு, 2 சிம்கார்டு, ரீசார்ஜ் கூப்பன் தேவைக்கேற்ப, பழைய புத்தகங்களில் இருந்து சில கவிதைகள், கடலை தேவைக்கேற்ப, ஜொள்ளு கால் லிட்டர்.

செய்முறை

முதலில் கடாயை நல்லா காய வைக்கிற மாதிரி காதலனை நல்லா காயவைங்க. அப்பத்தான் காதல் சுறுசுறுப்பா சூடு பிடிக்கும். கடாயில் கால் லிட்டர் ஜொள் ஊற்றுங்கள். அதில் உடனே 2 சிம் கார்டு போடுங்க. ரீசார்ஜ் உடன் கூடிய சிம்கார்டுதான் போடணும். ரீசார்ஜ் போடாமல் சிம் போட்டா காதல் குழம்பு கெட்டுப்போயிரும். ரேட் கட்டரும் போடணும். லைப் டைம் கார்டுல போட்டா 2 அல்லது 3 மாதம் வரைக்கும் தாக்கு பிடிக்கும்.

சிம் கார்டு போட்ட அடுத்த செகண்டே கடலை போட ஆரம்பிச்சிடணும். கடலை வெந்துட்டு இருக்கும் போது மொக்கை கவிதை எல்லாம் போடணும். அப்பத்தான் காதல் குழம்பு சுவையா இருக்கும். காதல் குழம்பு ரெடி...

இந்த வாரம் காதல் குழம்பு வைக்கிறது பத்தி தெரிஞ்சுக்கிட்டீங்க... அடுத்த வாரம் கள்ளக்காதல் குழம்பு வைப்பது எப்படி என்று தெரிஞ்சுக்கலாம்.

காதலுக்கும் கள்ளக்காதலுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கறீங்களா? போயிட்டு வாங்க அப்படின்னு சொன்னா அது காதல்...போயிட்டாரு வாங்கன்னு

சொன்னா அது கள்ளக்காதல் என்று சொன்னாரே ஒரு விளக்கம்...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா....

 

Post a Comment