தோழி கவுதமிக்காக கதை எழுதும் கமல்

|

சென்னை: கமல் - கவுதமி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்ட படம் பாபநாசம், பாபநாசம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கமல் தற்போது தூங்கா வனம் திரைப்படத்திற்காக தூங்காமல் உழைத்து வருகிறார்.

விரைவில் இந்தப் படம் வெளிவரவிருக்கிறது, இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக தோழி கவுதமிக்காக ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார் கமல். பாபநாசம் திரைப்படத்தில் கவுதமியின் நடிப்பைப் பார்த்து அசந்து போன கமல் கவுதமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதை ஒன்றினை தற்போது எழுதி வருகிறாராம்.

Kamal to Write a Story for Gautami

சந்தர்ப்பங்கள் நன்றாக அமையும் பட்சத்தில் இந்தப் படத்தை கமலே இயக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது, படம் முழுவதும் கவுதமியை மையப்படுத்தி வருவது போன்ற ஒரு கதையாக இது இருக்கும் என்று கூறுகின்றனர்.

தமிழில் மாபெரும் ஹிட்டடித்த தேவர்மகன் மற்றும் நம்மவர் போன்ற படங்களில் இணைந்து நடித்த இருவரும் மீண்டும் நீண்ட வருடங்கள் கழித்து பாபநாசம் திரைப்படத்தின் மூலம் திரையில் மீண்டும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் லிங்குசாமிக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்த கமல் அது முடியாத காரணத்தால் தூங்கா வனம் படத்தின் திரையரங்க உரிமையை லிங்குசாமிக்கு அளிக்கப் போகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

தூங்கா வனத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் சைப் அலிகானுடன் இணைந்து அரசியல் கலந்த ஒரு திரில்லர் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.

 

Post a Comment