சென்னை: தமிழ் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ படங்களின் தலைப்புகள் புதுமையாக இருக்கின்றன, தலைப்பை எப்படியாவது மக்களின் மனதில் இடம்பிடிக்க செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் இதற்காக ரூம் போட்டு யோசிப்பார்கள் போல.
இன்று தொடங்கியிருக்கும் உள்குத்து படத்தின் தலைப்பும் (பேரக் கேட்கும்போதே ஷாக்கா இருக்கா) இந்த வகையைச் சேர்ந்ததுதான். மெட்ராஸ் மற்றும் அட்டக்கத்தி படங்களை இயக்கிய ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக் ராஜூ இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார்.
அட்டக்கத்தியில் நாயகன், நாயகியாக நடித்த தினேஷ்- நந்திதா ஜோடி இந்தப் படத்திலும் இணைந்து நடிக்கின்றனர், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பாலா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
காமெடி கலந்த காதல் கதையாக உருவாகும் உள்குத்து படத்தில் தினேஷ் - நந்திதா இருவரும், விற்பனைப் பிரதிநிதிகளாக நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வக்குமார் தயாரிக்கிறார். 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற இருக்கின்றது.
அட்டக்கத்தி தினேஷ் உள்குத்து வேளைகளில் ஈடுபடுவாரோ?
Post a Comment